2025 மே 12, திங்கட்கிழமை

‘சுற்றுநிரூபம் வெளியிடப்படாமல் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடமாட்டோம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.நௌபர், ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

 சம்பள அதிகரிப்பு சுற்றுநிரூபம் வெளியிடப்படாமல் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடமாட்டோமென, தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழில் சங்கத் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் முன்னெடுத்துள்ள பணிப் பகிஷ்கரிப்புத் தொடர்ந்தும் இன்று (10) 31ஆவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கத் தேவையான சுற்றுநிரூபத்தை வெளியிடல், 45 சதவீத மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவை 75 சதவீதம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை, பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தைப் பயனுள்ளதாகத் தயாரித்துக் கொள்ளல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சிக் கொடுப்பனவைச் செலுத்துவதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிடல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X