2025 மே 14, புதன்கிழமை

சுற்றுலாத்துறை அதிகாரிகள் அருகம்பேக்கு விஜயம்

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

கொரோனா வைரஸ் தொற்று அச்ச சூழ்நிலையால் நாடு திரும்பாமல் ஹோட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகளின் நலன்களையும், பாதுகாப்பையும் நேரில் பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழு, நாட்டின் சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பொத்துவில் அருகம்பே பிரதேசத்துக்கும் இக்குழுவினர், நேற்று முன்தினம் விஜயம் செய்தனர்.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலிலும், ஆலோசனையிலும் விஜயம் செய்த இக்குழுவில், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை, தேசிய சுற்றுலா தொழிற்துறையினருக்கான சங்கம், சுற்றுலாத்துறை பொலிஸ் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் சுற்றுலா பயணிகளின் நிலமைகள் தொடர்பிலும், ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா தொழிற்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் பார்த்தீபன், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த திஸாநாயக்க, இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜகுபர், அறுகம்பே சுற்றுலா ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.அப்துல் றஹீம், அறுகம்பே சுற்றுலாத்துறை பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.ஆர்.திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்குழுவினர் ஹோட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டனர். அத்தோடு, சுற்றுலாப்பயணிகளுக்கு சிறிய அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X