Freelancer / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சகா)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மற்றுமொரு சிலை, அவர் அவதரித்த காரைதீவில் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது..
விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் நிறுவப்பட்ட அடிகளாரின் சிலையை மட்டக்களப்பு, இராமகிருஷ்ண மிஷன், உதவிப் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் திருமுன்னிலை அதிதியாக கலந்து கொண்டு தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில், சுபவேளையில் திறந்து வைத்தார்.

சுவாமிகளின் 'வெள்ளை நிற மல்லிகையோ.. ' என்ற பாடல் இசைக்க, அதிதிகளால் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டன.
இது சுவாமி பிறந்த காரைதீவு மண்ணில் நிறுவப்படும் ஐந்தாவது சிலையாகும்.இச் சிலையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் வழங்கி இருந்தார்.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீஸன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி, பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், திருக்கோவில் வலய பிரதி கல்வி பணிப்பாளர் சோ.ஸுரநுதன், சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் திருவுருவப் படங்கள் தாங்கி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025