Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2020 மார்ச் 11 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றி கம்பஸை அரசாங்கம் கையகப்படுத்தியிருப்பதை வன்மையாக கண்டித்துள்ள கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அரசாங்கத்தின் இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க இன, மத பேதங்களுக்கப்பால் கிழக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
கல்முனை மாநகர சபையில் நேற்று (10) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், "அனைத்து இன மாணவர்களினதும் உயர்கல்வி வாய்ப்பை கருத்தில்கொண்டே வெளிநாட்டு நிதியுதவியுடன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பெற்றி கம்பஸை நிறுவியிருக்கிறார்” என்றார்.
“இந்நிலையில், கடந்தாண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து, பெற்றி கம்பஸை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி, பாரியளவில் எதிர்ப்பு பிரசாரங்களை இனவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.இப்பல்கலைக்கழகத்தை மூட வேண்டும் அல்லது அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும் என்று இனவாதிகள் இன்றும் வலுயுறுத்தி வருகின்றனர்.
“நாடு தேர்தலொன்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அத்தகைய இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலும் முஸ்லிம்களைப் பழிவாங்கும் நோக்கிலுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.
“ஆகையால், பெற்றி கம்பஸ் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டத்தை உடனடியாக மீளப்பெற்று, எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தின் உயர்கல்விக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய நிறுவனமாக பெற்றி கம்பஸ் மிளிர்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்” என மேயர் வலியுறுத்தினார்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago