Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 25 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எஸ்.அஷ்ரப்கான், றாசிக் நபாயிஸ், சகா, எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 27 நாட்களின் இன்று (25) காலை 6 மணியளவில் நீக்கப்பட்டுள்ளன என கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பிரதேச வீதிகள் சில கடந்த காலங்களில் வெறிச்சோடி, பொலிஸார், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த நிலையில் தற்போது விலக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
கடைத்தொகுதிகளை துப்பரவு செய்யும் பணியை உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கிய சுகாதாரத் தரப்பினருக்கு கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூடப்பட்ட கல்முனை பிரதான நகர் சந்தையை சுகாதார நடைமுறைகளுக்கமைய விரைவில் திறப்பதற்கான ஒழுங்குகளை உரிய தரப்பினர் எடுத்துள்ளனர்.
கல்முனை பிரதேசத்தில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு, டிசெம்பர் 27ஆம் திகதி இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு, உள்ளக வீதிகள் பிரதான வீதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago