2024 மே 20, திங்கட்கிழமை

செய்கை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நெற் செய்கை பண்ணுவதற்காக சிவில் பாதுகாப்புப் படையினருக்கு அனுமதி வழங்கியிருந்த பொத்துவில் - கிரான்கோவை விவசாய காணியில் செய்கை பண்ணுவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (08) மாலை நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, செய்கை பண்ணுவதற்கு துப்புரவு செய்யப்பட்ட காணிகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிரான்கோவை விவசாயக் காணியை அதன் உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு படையினருக்கு செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், லகுகல, பொத்துவில் பிரதேச செயலாளர்கள், வனஇலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X