Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.அறூஸ்
ஜனாதிபதியின் எண்ணக்கருக்கமைவாக, 10 இலட்சம் வீட்டுத்தோட்டத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துக்கமைவாக, 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையத்தால் முதல்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத் தோட்டம், வேளாண்மை செய்கையில் ஈடுபடும் 610 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, விவசாய போதனாசிரியர் எம்.எஸ்.எம்.ஜெனித்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.
வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் 200 பேர், நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வரம்புப்பயிர்ச் செய்கையாளர்கள் 410 பேர் இதன்மூலம் நன்மையடையவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago