Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 20 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
அம்பாறை களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு, கடல்நாச்சி அம்மன் ஆலயத்துக்கு எதிரே உள்ள நீரோடையில், நண்பர்களுடன் இணைந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
அவ்விளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமோர் இளைஞரும் நீரில் மூழ்கிய நிலையில் நண்பர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ரீ.திமோத்தி ஆகாஷ் (வயது 20) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இவர் இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தமக்கது.
மேற்படி இளைஞர், செல்பி எடுத்தவாறு நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோதே, சேற்றில் சிக்கியுள்ளதுடன் அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து மூழ்கியுள்ளார் என்று தெரியவருகிறது.
நீண்டநேர தேடுதலின் பின்னரே, நீரோடையிலுள்ள சேற்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .