Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் பலத்த மழையைத் தொடர்ந்து, பிரதான நீர்ப்பாசனக் குளமான 'இங்கினியாகல டீ.எஸ். சேனநாயக' சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக, மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் சுதத் கமகே, இன்று (04) தெரிவித்தார்.
மொத்தம் 07 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் தற்போதைய நீர்மட்டம் 01 இலட்சத்து 97 ஆயிரம் ஏக்கர் கன அடியாக உயர்வு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலம் நிலவிய வரட்சியையடுத்து, நெற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் பிரதான குளமான, டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் நீர்மட்டம் 12,500 ஏக்கர் கன அடி வரை வீழ்ச்சி கண்டது.
எனினும், பருவ மழையைத் தொடர்ந்து, தற்போது ஆறுகள், குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள், களப்புகள் என்பனவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றன. ஆகையால், நீரேந்துப் பிரதேசங்களில் பொதுமக்கள் அதிகம் அவதானுத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை பெரும்போக நெற்செய்கையாக 1,75,000 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுள்ள நிலையில் மழையின் காரணமாக ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்செய்கை நிலங்கள், நீரில் மூழ்கி உள்ளன.
38 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
4 hours ago