2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சொகுசு காரில் போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோய்ன்  போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை  கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில்  நேற்று (27) மாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சொகுசு காரில்  போதைப்பொருட்களுடன் பயணித்த  இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான நபர்கள், கல்முனைப்பகுதியை சேர்ந்த  44 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் சந்தேகநபர்கள் வசம் இருந்து ஐஸ்  போதைப்பொருள் 6 கிராம் 80 மில்லிகிராம் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் 5 கிராம் 580 மில்லி கிராம் உட்பட  4 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன   விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை பொலிஸாரிடம் விசேட  அதிரடிப்ப டையினர் பாரப்படுத்தியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .