2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சௌபாக்கியா வீடு கையளிப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பயனாளிகளின் நன்மைகருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக, சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ், வீடற்றவர்களுக்கான வீடுகளை மக்களின் பங்களிப்போடு அமைத்துக் கொடுத்தும் வருகின்றது.

இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில், கோளாவில் 01 பிரதேசத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடானது, இன்று (10) திறந்து வைக்கப்பட்டு, கையளிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவறுத்தலுக்கமைய, சமுர்த்தி முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்துகொண்டு, வீட்டை திறந்து வைத்தார்.

நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்  வி.சந்திரகுமார்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.மதனிகா, சமுர்த்தி சமுதாய அடிப்படைய அமைப்பின் தலைவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X