2025 மே 12, திங்கட்கிழமை

‘ஜன.1 ​கடமைகளை பொறுப்பேற்கவும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைக்கமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் வரும் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி புதிய சேவை நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக அறிவித்துள்ளார்.

இடமாற்றக் கட்டளை வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களை விடுவிப்பதற்கு, அவர்களுக்கான உரிய பதிலீட்டு உத்தியோகத்தர்கள் வரும் வரை காத்திராமல், பணியைக் கையாள்வதற்கான தற்காலிக ஒழுங்குகளை மேற்கொள்ள திணைக்களத் தலைவர்கள் வழிவகுக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.  

இடமாற்றக் கட்டளைகள் வழங்கப்பட்டோரை, உரிய திகதியில் புதிய சேவை நிலையத்தில் கடமையை பொறுப்பேற்பதற்கு ஏதுவாக விடுவிப்புச் செய்யுமாறும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல செயலாளர்களுக்கும், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு சுற்று நிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான ஜனவரி மாத சம்பளக் கொடுப்பனவை, தற்போதைய சேவை நிலையத்தில் வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், அச்சுற்றுநிரூபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X