Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
நல்ல பல வேலைத் திட்டங்களை அதிரடியாக அமுல்படுத்தி வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குறிப்பாக சிறுபான்மை இனத்தினையும் ஒன்றாய் அரவணைத்து உலகின் முன்மாதிரி ஜனாதிபதியாக திகழ வேண்டுமென தெரிவித்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், பாதைகளை மூடி மக்களுக்கு அசௌகரி யங்களை வழங்காது முன்மாதிரியான செயற்பாட்டினை செய்தமையானது வரவேற்கத் தக்க விடயமாகுமெனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு அட்டாளைச் சேனையில் அமைந்துள்ள அந்நாரின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது இந்நாட்டின் ஆட்சியினைக் கையேற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்பின்,அரச நிறுவனங்கள் மற்றும் காரியாலயங்களில் வழமைபோன்று பொருத்தப்பட்டிருக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட துறைசார்ந்த வர்களின் புகைப்படங்களை அகற்றிவிட்டு நாட்டின் அரச இலட்சினையினை பொதுவாக பொருத்தும்படி பணித்திருப் பதானது தனது சுயநலமற்ற தன்மையினையும் பொதுப் படையான செயற்பாட்டினையும் பறைசாற்றி நிற்கின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் இந்நாட் டினைச் சிறந்த முறையில் ஆட்சி செய்தார். பிரதமரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அரசியல் அதிகாரம் அவர்கள் கரங்களில் கிடைத்த சந்தர்ப் பத்தினை, நன்கு பயன்படுத்தி சிறந்த ஆட்சி நிலவுவதற்கான வழிவகைகளை மேற்கொள்வார்கள் என்ற திடமான நம்பிக்கை எமக்குள்ளதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கணிசமான சிறுபான்மை வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. சுமார் ஆறு இலட்சம் வாக்குகள் நாட்டில் வாழ்ந்து வரும் சிறுபான்மைச் சமூகத்தினரால் அவருக்கு கிடைத்திருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலின் போது, சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் நாடாளுமன்றம் செல்வதற்கு மிக அத்தியவசிய மாகும் விடயத்தினை நாம் மறந்து விட முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026