2025 மே 12, திங்கட்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர் அநுர அம்பாறை விஜயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.எல்.எஸ்.டீன்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க,  இம்மாதம் 24ஆம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளாரென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர் தெரிவித்தார்.

அன்றைய தினம் பொத்துவில் நகரில் பிற்பகல் 03.30 மணிக்கும், அக்கரைப்பற்று நகரில் பிற்பகல் 05 மணிக்கும், சம்மாந்துறை நகரில் 06.30 மணிக்கும், மருதமுனை நகரில் பிற்பகல் 07.30 மணிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X