Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
முஸ்லிங்களின் காணிப் பிரச்சினைகள் தொடக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (10) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்தச் சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருடன் ஜனாதிபதி ஆழமாக கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
மேலும், அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய ஆசன உரையை பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், ஜனாதிபதியிடம் முஸ்லிங்கள் சார்பில் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில் சம்மாந்துறை மற்றும் மூதூர் போன்ற உள்ளூராட்சி மன்றங்களின் தரமுயர்த்தல் உட்பட ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள நிர்வாக முரண்பாடுகளை தீர்த்தல், கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களில் உள்ள நிர்வாக முரண்பாடுகளுக்கு தீர்வை காணுதல், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கும், மீனவர்களின் மீன்பிடிக்குமான எரிபொருளை தங்குதடையின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல், முஸ்லிங்களின் காணிப் பிரச்சினைகள் உட்பட முஸ்லிங்களின் முக்கிய பல பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை நாடி கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026