2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஜனாஸா எரிப்புக்கெதிராக கல்முனை மாநகர சபையில் பிரேரணை

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்

கொவிட்-19 தொற்று நோயால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான பிரேரணை, கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று  (25) பிற்பகல் நடைபெற்றபோது, மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தரினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. 

இதனை சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆமோதித்ததுடன், அனைத்து உறுப்பினர்களும் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதன்போது, கொவிட்-19 தொற்று நோயால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்து கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை மீறி, இனியும் ஜனாஸாக்களை எரித்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தாமல், நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட இப்பிரேரணையை, ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு, சபைச் செயலாளருக்கு மேயர் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X