Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எல்.எம்.ஷினாஸ்
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாசிச் சாறைக் குடிக்க வேண்டாம் என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் தெரிவித்தார்.
மருதமுனை சைல்ட் பெஸ்ற்; ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்தக் கலை கலாசார மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன அல்-மனார் மத்திய கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்று எமது பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றன. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதன் அறிகுறிகளை அறிந்தவர்கள் பப்பாசிச் சாறைக் குடித்துக்கொண்டு எமது வைத்தியசாலைக்கு வருகின்றனர். ஆதாரம் இல்லாத விடயத்தைச் செய்ய வேண்டாம். இது தற்போது ஆய்விலுள்ள விடயமாகும். அங்கிகாரம் பெறுவதற்கு அல்லது மருத்துவத்துறையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்னும் பல படிநிலைகளை தாண்ட வேண்டும்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டால் எமக்கும் அதற்குரிய மாத்திரைகள் கிடைக்கும்' என்றார்.
தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலேயே நுளம்புகள் உருவாகின்றன. வீட்டுச் சூழலில் முடிந்தளவு தண்ணீர் தேங்கி நிற்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு வீட்டிலுள்ள சிறார்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
2 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
19 Jul 2025