Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 21 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
இலங்கையில், இவ்வருடம் 45,845 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சமயத்தலைவர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், ஆகியோருக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (21) சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
1960ம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையில் டெங்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந் நோய் இன்று சர்வதேசத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆசியா நாடுகளிலேயே டெங்கு நோயாளர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றார்கள்.
வருடமொன்றுக்கு உலகில் 50 மில்லியன் பேர் டெங்கு தாக்கத்திற்கு உற்படுவதாக உலக சுகாதாரஸ்தாபனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந் நோயினை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் விசேட செயலணி அமைக்கப்பட்டு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. டெங்கு நோய் பரவாமல் தடுப்பதது நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் கடமையாகுமென்றார்.
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025