Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, ஒலுவில் அஷ்ரப் நகர் கிராமத்திலுள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தில்; குப்பைகளை முறையாகப் பராமரிக்காமை காரணமாக அக்கிராம மக்கள் சுகாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆகவே, மேற்படி திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தில் காணப்படும் பிரச்சினையை ஆராய்வதற்காக உயர்மட்டக் குழுவை நியமித்து அது தொடர்பான அறிக்கையை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஞாயிற்றுக்கிழமை (09) பணித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'அட்டாளைச்சேனை பிரதேச சபையால் பராமரிக்கப்படுகின்ற இத்திண்மக்கழிவு நிலைய வளாகத்தில்; சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தும் கல்முனை மாநாகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், மேற்குறித்த சபைகளிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மாதாந்த வருமானமும் கிடைக்கின்றது.
இத்திண்மக்கழிவு நிலைய வளாகத்தில் குப்பைகளை முறையாக பராமரிக்காமையால் துர்நாற்றம் வீசுவதுடன், இலையான்களின் தொல்லையும் காணப்படுகின்றது. மேலும், உணவுக்காக தினமும் அவ்வளாகத்தினுள் பிரவேசிக்கும் யானைகள், அவ்வளாகத்தை அண்டியுள்ள மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றது. எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago