Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தலுக்காக அதிக பணத்தை செலவிடும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளதெனச் சாடும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தின், கூட்டமைப்பு பதுக்கி வைத்திரும் பணம் தேர்தல் காலத்தில் வெளிவரும் என்றார்.
அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று(28) மாலை இடம்பெற்ற தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டுமேலும் கருத்துரைத்த அவர்,
'30வருட போராட்டம் 12 வருட நாடாளுமன்ற அனுபவம்' என்பவற்றோடுனயே அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துகு தேவையான மாற்றத்தை உருவாக்க தன்னால் முடியும் எனவும்,. அதற்காகவே கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ற பேரில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல புத்திஜீவிகளையும் உள்வாங்கிய அமைப்பின் கீழ் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்கான அதிகாரங்களை முறையாக பயன்படுத்தவில்லை என்றும், சாய்ந்தமருது நகர சபை தரமுயர்த்தப்படுவதை தானே தடுத்ததாகவும் தெரிவித்தார்.
சாய்தமருத்துக்கு நகர சபை பெற்றுக்கொடுப்பதை தான் எதிர்க்கவில்லை என்றும், கல்முழன வ்க்கு பிரதேச சபையை தரமுயர்த்திய பின்னர் சாய்தமருது பிரதேச சபையையும் தரமுயர்த்த வேண்டும் என்றே தான் கோரியதாகவும் தெரிவித்தார்.
அதன்படி மொத்தமாக 6 பிரதேச செயலங்கள் , சபைகள் தேர்தலின் பின்னர் தரமுயர்த்தப்படும் என தெரிவித்த அவர், கல்முனை விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.
அத்தோடு, தேர்தலுக்காக, தமிழத் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான பணத்தை செலவிடுவதாக தெரிவித்த அவர், பதுக்கி வைத்துள்ள பணம் தேர்தல் காலத்தில் வெளிவரும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago