2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 26 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால, எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவபீடத்தின்  17 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டதைக்  கண்டித்தும் அவர்களை மீள அனுமதிக்குமாறு கோரியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை (26) மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகாமைத்துவ வர்த்தக பீட மாணவர்கள் 17 பேர், தொழில்நுட்பபீட மாணவர்களை பகடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 19ஆம் திகதி முதல் அவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தடையை நீக்கக் கோரியுமே இக்கண்டனப் பேரணி மிகவும அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் நடவடிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
 

மற்றும் சைற்றம் பல்கலைக்கழகத்தை இரத்துச் செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.  

மாணவர்களின் சுதந்திரத்தினை பறிக்காதே, பல்கலைக்கழகத்தில் கூட்டங்கள் நடத்தும் உரிமையை வழங்கு, மாணவர்களை அடக்கி ஆலும் முறையினை நிறுத்து, சைற்றம் பல்கலைக்கழகத்தை உடனடியாக மூடு போன்ற சுலாபங்களை ஏந்திய வண்ணம் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X