2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தென்கிழக்கு பல்கலையில் 3 கற்கைகளுக்கான பதிவு 24ஆம் 29ஆம் திகதிகளில்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்; வர்த்தக முகாமைத்துவம், முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும், பிரயோக விஞ்ஞானம் ஆகிய கற்கைநெறிகளுக்கான பதிவுகள் இம்மாதம் 24ஆம் 29ஆம் திகதிகளில் அப்பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில்  மேற்கொள்ளப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் கற்கைநெறிகளுக்காக 271 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இக்கற்கைநெறிகளுக்கான பதிவுகள் இம்மாதம் 24ஆம் 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படும்.  

மேலும், பிரயோக விஞ்ஞானக் கற்கைநெறிக்காக 166 விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கான பதிவு இம்மாதம் 29ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் இஸ்லாமிய மற்றும் அரபுமொழிக் கற்கைக்காக 430 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதற்கான பதிவு புதன்கிழமை அப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 385 பேர் பதிவுகளை மேற்கொண்டதாக அப்பல்கலைக்கழக இஸ்லாமிய மற்றும் அரபு மொழித்துறைப் பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி கலை கலாசாரக் கற்கைக்கான பதிவு மேற்கொள்ளப்பட்டபோது, 192 பேர் பதிவு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X