Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசாசரவணன்
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிக்குடியாறு பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக 101 வீடுகள் மற்றும் 06 கிணறுகளை நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார்; தெரிவித்தார்.
கடந்த யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசங்களில் ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து திருக்கோவில், விநாயகபுரம் மற்றும் தம்பிலுவில் பிரதேசங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் முதற்கட்டமாக 100 வீடுகளை தலா இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ள நிலையில், இதற்கான நிர்மாண வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்தப் பிரதேசங்களில் காட்டு யானைகள் ஊடுருவாதவாறு மின்சார வேலிகள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, வீட்டுக்கு வீடு என்ற அரச வேலைத்திட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் வீதிகள், குடிநீர் வசதிகள், வடிகான்கள் ஆகியவற்றுக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
26 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago