2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

திருக்கோவில் பிரதேச விவசாயிகளுக்கு உபகரணங்கள்,பழக்கன்றுகள் விநியோகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் ஊடாக பயன்படுத்தப்படாத காணிகளில் இருந்து உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ளும் மாதிரி விவசாய கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள்,பயிர் விதைகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை விநாயகபுரம் 4 கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது, திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான உதவிகளை வழங்கி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில், காணி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.நஜீப்,திருக்கோவில் பிரதேச செயலக கணக்காளர் எம்.அரசரெத்தினம்,கிராம சேவகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சறோஜா தெய்வநாயகம், மாகாண விவசாய போதனாசிரியர் திருமதி த.ரவிச்சந்திரன்,பிரதேச காணி பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வசந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .