2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திருக்கோவில் வலய கல்விப் பணிமனையில் தீ

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட திருக்கோவில் வலய கல்விப் பணிமனையில் செவ்வாய்க்கிழமை (30) இரவு திடீரென்று தீ பரவியதன் காரணமாக அலுவலகக் கோவைகளும் கணினியும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பணிமனையில் தீ பரவியமையைக் கண்ட காவலாளி, இது  தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார். இதனை அடுத்து, காவலாளியும் அதிகாரிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X