2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,வி.சுகிர்தகுமார்

அம்பாறை - ஆலையடிவேம்பு - சாகாமம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை 06.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் சித்தாண்டியில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், வியாழக்கிழமை (15) நள்ளிரவு 12.00 மணியளவில் குறித்த வீட்டை உடைத்து 15 பவுண் தங்க ஆபரணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து, நேற்று, காணாமல் போன மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X