2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை, தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்ற தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு, இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவந்தவர்களுக்கு இடுப்பு வியாதி தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தினை வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் கே.எல்.எம்.நக்பர் வழங்கினார்.

இதேவேளை, தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரீ.எம்.நப்தா நோயாளிகளுக்கு சுவாசத்தை சீராக உள்வாங்கி வெளியிடல் தொடர்பில் யோக பயிற்சியும், விளக்க உரையும் நிகழ்த்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X