2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

துவிச்சக்கரவண்டி திருடியவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (11) அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, அவரால் திருடப்பட்ட துவிச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை அக்கரைப்பற்று -3ஆம் பிரிவில் வசிக்கும் ஆதம் லெப்பை முஹம்மட் முர்ஸித் என்பவரின் துவிச்சக்கர வண்டியை அவரது சகோதரார் முஹம்மட் சுஹைப் என்பவர் சனிக்கிழமை (10) எடுத்துக் கொண்டு, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார்.

துவிச்சக்கர வண்டியை விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைத்துவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி அங்கு இல்லாமல் இருந்ததைக் கண்ட நபர், குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் மறுநாள், தனது விற்பனை நிலையத்துக்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெராவில், பதிவான காணொளியின் மூலம், துவிச்சக்கர வண்டியை கொண்டுச் சென்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த விற்பனை நிலையத்துக்கு முன்னால் வருகை தந்ததை அவதானித்த உரிமையாளர், பொலிஸ் அவசர அழைப்புச் சேவைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X