Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
2016ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 356 மில்லியன் ரூபாய் நிதியில் அம்பாறை, தெஹியத்தக்கண்டி வைத்தியசாலையில் 56 மில்லியன் ரூபாய் நிதியில் சிறுநீரக நோயாளர்களுக்கான பிரிவை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '65 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட இப்பிரதேசத்தில் 10 ஆயிரம் பேரை பரிசீலனை செய்தபோது, அவர்களில் 1200 பேர் சிறுநீரகம் சார்ந்த நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிறுநீரக நோய்களை பரிசோதிக்க 8 இயந்திரங்கள் உள்ளதாகவும் இன்னும் புதிய இரண்டு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு நாளாந்தம் சுமார் 12 நோயாளர்கள் இலவசமாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதற்காக செலவிடப்படுகின்ற தொகை 6000 ரூபாய் ஆகும்' என்றார்.
11 minute ago
15 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
5 hours ago
6 hours ago