Gavitha / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
தடைப்பட்டுப்போன ஜனாதிபதியின் ஏறாவூருக்கான விஜயம் வெகு விரைவில் இடம்பெறுமென, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தனது அழைப்பின் பேரில் தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக, பெப்ரவரி 06 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதியின் விஜயம், தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த முதலமைச்சர் கூறியதாவது, 'ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெப்ரவரி 6 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்தார்.
வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.
இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலை, கைத்தறித் தொழிற்சாலைகள் இரண்டு என்பவை பெப்ரவரி 6 ஆம் திகதி ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருந்தன.
எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த நிகழ்ச்சித் திட்டம் தடைப்பட்டுப் போன போதும், வெகுவிரைவில் ஜனாதிபதியைக் கொண்டு இந்தத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்படும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 2,000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் என்றும் முதலமைச்சர் கூறினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025