அஸ்லம் எஸ்.மௌலானா / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சில தனி நபர்களால் கையகப்படுத்தப்பட்டு, நீண்ட காலமாக நீதிமன்ற வழக்கில் இருந்து வந்த கல்முனை, பிஸ்கால் காணியை, கல்முனை மாநகர சபை மீட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக, மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் சிலர், இதனை மீண்டும் அபகரிக்க முற்பட்ட வேளையில், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், துரிதமாகச் செயற்பட்டு, அம்முயற்சியை முறியடித்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாழடைந்த நிலையில் காணப்படுகின்ற இக்காணி, கல்முனை மாநகர சபை ஊழியர்களால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
மாநகர மேயர் ஏ.எம்.றகீபின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற இந்நடவடிக்கையின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். அத்துடன் மாநகர ஆணையாளர் எம்.சி அன்சார், மாநகர மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசன் அக்தார், எம்.எஸ்.எம் நிசார், எம்.எஸ் உமர் அலி, எம்.எஸ்.எம்.நவாஸ், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர மத்தியில் அமைந்துள்ள 'கல்முனை வாசல்' சுற்றுவட்ட சந்தியை அண்மித்துள்ள முக்கிய பகுதியில் அமைந்துள்ள மிகப்பெறுமதியான இக்காணியை சீரமைத்து, கல்முனை மாநகர சபையின் வாகனத் தரிப்பிடமாகவோ, பிற தேவைகளுக்கோ பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மாநகர மேயர் இதன்போது தெரிவித்தார்.
10 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
35 minute ago