Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிநபர் அரசியல் அபிலாசைகளால், இன்று சமூகத்தின் ஒற்றுமை புறந்தள்ளப்பட்டு வருவது பாரிய ஆபத்தான விடயமாக மாறியுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இதனால் எமக்கிருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவப் பலமும் இல்லாமல் செய்யப்பட்டு, குரலற்ற ஒரு சமூகமாக மாற்றப்படவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம் ஆளுமைக்கான மய்யத்தின் 5ஆவது ஆண்டு விழாவும் துறைசார் சாதனையாளர்கள், சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும், அட்டாளைச்சேனையில் நேற்று (08) இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஹரீஸ் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், சிறுபான்மை சமூகத்துக்கு, விகிதாசார முறையால் கிடைக்கின்ற நாடாளுமன்ற பிரதிநிதித்துவமே பலமாக இருந்து வந்ததாகவும் அதனால்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, தமது உரிமைகளை ஓரளவேனும் தக்கவைத்துக்கொள்ளக் கூடியதாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் விகிதாசார தேர்தல் முறை அடிப்படைவாதிகளுக்கு உரமூட்டுவதாகவும் அதனை ஒழிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறிவருகின்றனார் எனக் கூறிய அவர், இது ஆபத்தான விடயமென்றும் தெரிவித்தார்.
இன்று ஏற்பட்டுள்ள அரசியல் ஆபத்துகளையும் யதார்த்தங்களையும் சமூகமும் அரசியல் தலைமைகளும் புரிந்துகொண்டு, தனிப்பட்ட அபிலாசைகளையும் அரசியல் குரோதங்களையும் புறந்தள்ளி வைத்துவிட்டு, ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசியமாகுமெனவும் ஹரீஸ் எம்.பி வலியுறுத்தினர்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு, ஒரு கூட்டமைப்பாக சேர்ந்தால் 05 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறினார்.
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago