2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதே எமது இலக்கு’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமையப் பெற்றவுடன், எவ்வாறு இப்பிராந்தியம் கல்வித்துறையில் உயர்ச்சியடைந்ததோ, அதேபோன்று தனியார் பல்கலைக்கழகமொன்றையும் நிறுவி, இப்பிராந்தியத்தின் சிறந்த கல்வியலாளர்களை உருவாக்குவதே தமது இலக்கு என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

 

1,000 இலவச மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒலுவில் பிரதேசத்தில் 129 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கி வைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியானது, கல்வியைக் கொண்டே அளவீடு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில், இப்பிராந்தியத்தில் கற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மறைந்த தலைவர் அஷ்ரபுடன் பக்கபலமாகவிருந்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கினோம்.

“அடுத்த கட்டமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அனுசரணையுடன், இப்பிராந்தியத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினையும் நிறுவி, அதனூடாக இன்னும் பல கல்விமான்களையும் அறிஞர்களையும் உருவாக்குவதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றேன். அந்த தூய நோக்கத்துக்கான பயணத்தின் இலக்கை அடைந்து கொள்வதற்கான காலம், தற்போது அண்மித்துள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .