2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தபால் சேவை வழமைக்கு திரும்பியது

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு  மேலாக தடைப்பட்டிருந்த தபால் சேவை, நேற்று முதல் (22) வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.

மார்ச் மாதம் 16ஆம் திகதி தொடக்கம், தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.

தற்போது சில மாவட்டங்கள் தவிர்ந்து ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டு, சுமூகமான நிலை ஏற்பட்டு வருவதையிட்டு, தபால் திணைக்களத்தின் சேவைகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதோடு, தபால் விநியோகமும், வழமை போன்று இடம்பெற்றது.

தபால் அலுவலகங்கள் தொற்று நீக்கப்பட்டு, கரும பீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தபால் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் கை கழுவுதல், சமூக இடைவெளிக்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை அஞ்சல் அலுவலகங்களால் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் வழமை போன்று இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X