2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தை தரமுயர்த்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் கோட்டத்திலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த வருடத்துக்குள்; தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை தான் எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை (08) மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வித்தியாலயத்தில் காணப்படும் தளபாட பற்றாக்குறை உட்பட பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தளபாடப்; பற்றாக்குறையை  நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X