Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டவர்களை தோக்கடிக்க வேண்டும் என்று செயற்பட்ட பலர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பாறை மாவட்டத்தில் பாதுகாக்க இருப்பதாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கின்றது என நாவிதன்வெளி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சிவலிங்கம் குணரெட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று சனிக்கிழமை மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் வென்று விடக்கூடாது என்ற நோக்குடன் சிலர் செயற்பட்டது கண்டனத்துக்குரியது.
அம்பாறை மாவட்டமானது கடந்த காலங்களில் பெரும்பான்மை சமூகத்தினால் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியதுடன் கடந்த கால யுத்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த மக்களின் துயர் துடைக்க கூடிய பொருத்தமானவர்கள் இன்று இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது என்றார்.
மேலும்,பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதை விட்டு தேர்தல் காலத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்களோ அதே கட்சியில் இருந்து அந்தக் கட்சிக்காக உண்மையானவர்களாக இருக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவே அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் நிலையாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வெற்றி உறுதியாகி இருந்த நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாத தமிழரசுக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டதன் காரணமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி வாய்ப்பு தடைப்பட்டது.
இதற்குக் காரணம் தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் சுயநலப்போக்கே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago