2025 மே 05, திங்கட்கிழமை

’தமிழர்கள் ஒரு குடையின் கீழ் வாழ வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு குடையின் கீழ் தமிழர்களாக வாழவேண்டுமென, சமூக நல்லிணக்க அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அமைச்சின் தேசிய இணைப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார்.

இதேவேளை, அவரவர்களுக்குரிய தலைமைத்துவத்தை அவரவர்களே தெரிவு செய்யவேண்டுமெனவும். அதனூடாக அவர்களது பிரச்சினைக்கு அவர்களே முகம்கொடுத்து தீர்வினையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அமைச்சர் மனோகணேசன் அவர்களது எண்ணமும் விருப்பமுமெனவும் கூறினார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில், அமைச்சர் மனோகணேசனின் 41 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக வீதியை இன்று (22) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“அமைச்சர் மனோ கணேசன் இன்றைய கால இளைஞர்களுக்கு தேவையான சிறப்பான முன்னுதாரணமான  தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார். அவர்களின் விருப்புக்கு அமைய, வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கும் தமது சேவையை விஸ்தரித்துள்ளார்” என்றார்.

இதற்காக அரசாங்கத்துடன் பேசி அதிக நிதியினையும் இங்கு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் பலாபலனை இன்று தாம் அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X