2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தரம் -2 மாணவர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள 18 பாடசாலைகளில் தரம் -2 வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்ட பல்மட்டக் கற்பித்தல் செயற்பாட்டுக்காக   பாடசாலைகளின் வகுப்பறைகள் ஒழுங்குபடுத்தி மாணவர்களின் கல்வியை சமநிலைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

புதிய கற்பித்தல் செயற்பாட்டுக்கான வகுப்பு அறையை கஞ்சிகுடிச்சாறு பாடசாலையில்  இன்று வியாழக்கிழமை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் பாடசாலை ஒன்றுக்கு 25,000 ரூபாய் படி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை அதிகரிக்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும்.

இதனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு கல்வியில் முன்னேற வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X