Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்கெடுப்பு நிலையத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாதவர் களுக்கு தற்காலிக ஆள் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் இன்று புதன்கிழமை (23) தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை செல்லுபடியான கடவுச் சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆள்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் மதகுருமார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை மேற் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றும் இல்லாதவர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படவுள்ள தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறினார்.
ஆள் அடையாள அட்டை இல்லாதவர்கள் தத்தமது கிராம சேவை அதிகாரிகளிடம் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.
தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகளால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோ கிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகள் அல்லது வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026