2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தவிசாளரை தாக்கிய ஐவருக்கு விளக்கமளியல்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 

அம்பாறை, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். அப்துல் வாஸீத்தை தாக்கியும், பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 சந்தேக நபர்களை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விள்ளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன், நேற்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை (23) வீதியில் சென்று கொண்டிருந்த பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். அப்துல் வாஸீத்தை ஒரு கும்மபல் ஒன்று வழிமறித்து தாக்கியதையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸாரின் ஜீப் வண்டியையும் சேதப்படுத்திருந்தனர்.

பொலிஸாரின் துரித நடவடிக்கையின் பயனாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 நபர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (07) மீண்டும் ஆஜர் செய்த போது தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X