Editorial / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள், பொத்துவில் பிரதேசத்துக்கு ஊடுருவியுள்ளனர் என்று, அறுகம்பே விசேட அதிரடிப்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித், இன்று (30) தெரிவித்தார்.
எனவே பொத்துவில் பிரதேசத்தில், சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டம், புதிதாக வீடு வாடகைக்கு கொடுப்பவர்களின் தகவல்கள், வீதி ஓரங்களில் நின்று நீண்ட நேரம் அலைபேசியில் உரையாடுபவர்கள், தொடர்ந்து பூட்டப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக, அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல்களை வழங்குமாறு, அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .