2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.டி யுதாஜித்

அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவன் புனுவினுர குமாரசிங்கவால் (வயது 19)  தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம், இன்று (22) அம்பாறை மாவட்டச் செயலாளர்  டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் அவரது காரியாலயத்தில் வைத்து செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டதுடன், மாவட்டச் செயலாளரிடம் பாவனைக்காகக் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி மாணவன், அம்பாறை டி.எஸ்.சேனாயநாயக்க கல்லூரியில் உயர்தரம் தொழில்நுட்பப்பிரிவில் கல்வி கற்று, கடந்த வருடம் உயர்தரப்பரீட்சை எழுதி, பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கிறார்.

இந்த இயந்திரத்தை அலுவலகங்கள், வங்கிகள் போன்ற மக்கள் பாவனையுள்ள இடங்களில் பொருத்திப் பயன்படுத்த முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .