2025 மே 03, சனிக்கிழமை

திடீர் சோதனை; 50 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Editorial   / 2022 மார்ச் 09 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை   பிராந்தியத்தில் இன்று(09) காலை முதல் மதியம்   வரை  முன்னெடுக்கப்பட்ட திடீர் வீதி சோதனை நடவடிக்கையின் போது 50 பேருக்கு  எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை   போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி மற்றும்  பாண்டிருப்பு  போன்ற இடங்களில்  இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பிலேயே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்தோடு, வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகளும் பொலிஸாரால் வழங்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது  கொரோனா அனர்த்தத்தின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பின்னர் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  ஆலோசனையின் படி, முக்கிய சந்திகள், பிரதான  வீதிகளில்  கல்முனை    பொலிஸ் நிலைய  போக்குவரத்துப் பொலிஸார் சோதனை நடவடிக்கையை  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X