2025 மே 08, வியாழக்கிழமை

‘திணைக்களங்களின் வளர்ச்சிக்கு தொழிற் சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொழிற் சங்கங்கள், தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 12ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும், தலைவர் யூ.எச். ஜயந்த தலைமையில் சாய்ந்தமருது லீமெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே, அவர் இவ்வாறு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடந்து உரையாற்றுகையில், தபால் திணைக்களம் நவீன மையப்படுத்தப்பட்டு, புதிய பரினாமத்துடன் தொழிநுட்ப ரீதியிலான மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொழிற் சங்கங்கள் எப்போதும் முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால்தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியுமெனத் தெரிவித்த அவர், தொழிற் சங்கங்கள் வெறுமென போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால், அவை ஒரு வலுவான சங்கமாக அமையாதெனவும் எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு, தீயவைகளுக்கு எதிர்த்துப் போராட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அந்த வகையில், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதாகவும் அஞ்சல் திணைக்களத்துக்கு இத்தொழிற் சங்கம் ஒரு வழிகாட்டியாகச் செயற்படும் என்பதில் ஐயமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X