2025 மே 12, திங்கட்கிழமை

திருக்கோவில் பாதீடு நிறைவேற்றம்

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

திருக்கோவில் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையை, திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் டபிள்யூ.கமலராஜன் சபையில் இன்று (09) சமர்ப்பித்தார்.

இதன்போது அற்கிருந்த 14 உறுப்பினர்கள், அறிக்கைக்கு ஆதரவாக கையை உயர்த்தி, தமது விருப்பைத் தெரிவித்தனர். அதன்பின்னர் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்பிரதேச சபையில், த.தே.கூ 7 பேரும் சு.க 3 பேரும் ஐ.தே.க, ஈ.பி.டி.பி தலா 2 பேரும்  த.வி.கூ, அ.இ.த.கா தலா ஒருவருமாக மொத்தம் 16 உறுப்பினர்கள் உள்ளனர். நேற்றையதினம் இரு உறுப்பினர்கள் சபைக்குச் சமுகமளித்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X