Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 11 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை - திருக்கோவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), அனைத்து கட்சி உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன், ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச சபையின் 4ஆவது சபையின் 33ஆவது அமர்வு, தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையில் இன்று (11) நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் 02 உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் 02 உறுப்பினர்களும், இலங்கை தமிழ் காங்கிரஸின் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலை கூட்டடணி கட்சியின் 01 உறுப்பினருமாக 16 சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன், 2021ஆம் ஆண்டுக்கான 60 மில்லியன் (6 கோடி) 10 இலட்சத்துக்கான நிதியறிக்கை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், திருக்கோவில் சபையின் செயலாளர் ஜேஆர்.சத்தியசீலன், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.
13 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
21 minute ago