2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருவள்ளுவரின் சிலை நாளை திறப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சகா

இந்தியாவிலிருந்து  தருவிக்கப்பட்ட தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழா  காரைதீவில் நாளை  (28) வெள்ளிக்கிழமை காலை   நடைபெறவிருக்கிறது.

காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் நாளை காலை சபைத் தவிசாளரும் சிலை நிறுவும் குழுத்தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெறவுள்ளது.

இராம கிருஷ்ண மிசன் மட்டு.மாநில உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் ஜீ மஹராஜ் திருவுருவச்சிலையைத் திறந்துவைக்கவிருக்கிறார்.

விழாவுக்கு பிரதம அதிதியாக திறைசேரியின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் முதன்மை அதிதியாக அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், ஆன்மீக அதிதிகள் கௌரவ அதிதிகள் சிறப்பு அதிதிகள் விசேட அதிதிகள் உள்ளக அதிதிகள் என பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சிலை நிறுவுதலையொட்டி 'வள்ளுவனார் படிவ மலர்' என்று சிறப்பு மலரும் வெளியிட்டுவைக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X