Editorial / 2019 மே 19 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
அம்பாறை, துறைநீலாவணையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை, நேற்று முன்தினம் இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிஸார், இளைஞரின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் விடுவித்துள்ளனர்.
துறைநீலாவணை கண்ணகியம்மன் கோவிலின் வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் சனிக்கிழமை (18) தூக்குக் காவடி ஊர்வலம் சென்றுகொண்டிருந்த போது, அடியார்களோடு அடியாராக கல்முனைக்குடியை சேர்ந்த இளைஞரொருவர் (வயது 21) சென்றுக்கொண்டிருந்துள்ளார்.
இளைஞர்களுக்கு அச்சம் ஏற்பட்டு அவ்விளைஞரிடம் விசாரிக்க முற்படுகையில், சந்தேகநபர் தப்பிஓடியுள்ளார். எனினும் பிரதேச மக்கள் அவ்விளைஞனை மடக்கிப்பிடித்துள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைக்காக அவ்விளைஞனை பொலிஸ் நிலையத்தக்கு அழைத்துச் சென்றதுடன், கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு அவ்விளைஞனை விடுவித்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago