2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருவெம்பாவை இன்று ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

சிவபெருமானை நினைந்து அனுஸ்ட்டிக்கும் திருவெம்பாவை விரதம், இன்று (01) அதிகாலை ஆரம்பமாகியது. இவ்விரதம், தொடர்ந்து 09 நாள்கள் நடைபெற்று, 10ஆம் நாளான இம்மாதம் 10ஆம் திகதி திருவாதிரை தீர்த்தோற்சவம் நடைபெறும்.

அந்தவகையில், காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் வருடாந்தம் நடத்திவரும் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம், நேற்று அதிகாலை நடைபெற்றது.

முதல்நாள் ஊர்வலம் நிறைவுற்றதும் திருவெம்பாவை விசேட பூஜையை, காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலில், பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் நடத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X