2025 மே 14, புதன்கிழமை

துப்பாக்கி சூடு விவகாரம்; மற்றுமொரு சந்தேகநபர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், கனகராசா சரவணன்

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபருக்கு சூட்டுப்பயிற்சி வழங்கியதாக சந்தேகத்தில் மற்றுமொரு சந்தேகநபரை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (20) இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய 26 வயதுடைய சந்தேகநபர்  மறுநாள் கைதாகி இருந்தார்.

குறித்த கைதான சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மேலதிக தகவலை பெற்ற பின்னர்   சம்மாந்துறை, மலையடிக்கிராமம் 1ஐ சேர்ந்த 38 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரை இன்று (23) கைது செய்துள்ளனர்.

இவ்வாறு இரண்டாவதாக  கைதான  சந்தேகநபர், ஏற்கெனவே கைதான சந்தேக நபருக்கு துப்பாக்கி சுடுவது குறித்து பயிற்சி அளித்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேகநபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மீட்கப்பட்ட துப்பாக்கி, பாகிஸ்தான் நாட்டுத் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டவது சந்தேகநபரை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நாளை (24) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X